முதல் மாதாந்த கொடுப்பனவை கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் ரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி!!
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் தனது முதல் மாதாந்தக் கொடுப்பனவை கல்விக்காக வழங்கி முன்மாதிரியாக செயற்பட்டுள்ளார்.
அவர் சொறிக்கல்முனை ஹொலிக்குறோஸ் பாடசாலையில் 2024ம் ஆண்டு சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கு முதல் மாத கொடுப்பனவில் அப்பியாச கொப்பிகளை வழங்கி மாணவர்களை கெளரவித்தார்.
இந்நிகழ்வு திருச்சிலுவை திருத்தல முன்றலில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி டிலக்ஷி, மற்றும் பிரதி அதிபர் எம்.குமாரராசா மற்றும் ரி.கண்ணதாசன் ஆசிரியர், சமூக சேவையாளர் கே. திருச்செல்வம், கல்முனை ஆதாரவைத்தியசாலை தாதிஉத்தியோகஸ்தர் எஸ். சுதாகரன் கிராமவாழ் சமூகசெயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியதோடு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
அத்தோடு பிரதி தவிசாளரின் சேவை மனப்பாங்கினையும் வாழ்த்தினர்..
பிரதேச சபை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்படும் தனது மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாகவும் இன்று,
No comments