Column Left

Vettri

Breaking News

கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.




( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் 2019/2023 அதிபர் சேவை தரம் - 3 நியமனம் பெற்றவர்களுக்கான ஒரு மாத கால சேவை முன்பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காரைதீவு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றது. நிகழ்வல் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
. நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் சார்பில் அதன் நிர்வாகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிஎம். யாசீர் அறபாத் முகைதீன் மற்றும் கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்எச்எம். ஜாபீர் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். மேலும் கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்எச். றியாஸா, திருமதி வ. சாந்தரூபன், ஆ.சஞ்சீவன், ஏசி. நுஸ்ரத் நிலோபரா, பி. பரமதயாளன்,அ.அஸ்மா மலீக், ஏஎம்எம். சியாத் ஆகியோரும் கலந்து நிகழ்வுக்கு உயர்வு சேர்த்தனர். கல்முனை கல்வி வலயத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற இச்சேவை முன் பயிற்சிக்கான இணைப்பாளராக வலயத்தின் சார்பில் இணைக்கப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூஎல்எம். சாஜித் முன்னிலை அதிதியாகவும் கலந்து சிறப்புற நிகழ்ந்த இந்நிகழ்வு அதிபர் நவாஸ் சௌபி தலைமையில் 100 அதிபர் சேவையாளர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதிபர் சேவை நியமனம் பெற்று சம்மாந்துறை கல்வி வலயப் பாடசாலைகளில் கடமையாற்றிய சக 4 அதிபர்கள் இலங்கை கல்வியியலாளர் சேவைக்கு தெரிவாகி நியமனம் பெற்றமைக்காக அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

No comments