தேர்தல் வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் காரைதீவு தவிசாளர் பாஸ்கரன்!!
காரைதீவு பிரதேசசபை தவிசாளரின் தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமான வடிகான்களிலுள்ள குப்பைகளை அகற்றி சீரான முறையில் நீர் வடிந்தோடக்கூடிய வகையில் நேற்றைய தினம்(01) சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது இவ்நிகழ்வானது காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட உள்ளூர் வீதிகளில் பிரதேசசபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து களநிலைமைகளை பார்வையிடச்சென்ற காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார் " ஒவ்வொரு வாரமும் வருகின்ற சனிக்கிழமைகளில் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் அந்த வகையில் இன்று வடிகான்களை துப்புரவு செய்யும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை அழிக்க முடியாது என்ற கருத்தில் அடிப்படையில் பொது மக்களாகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் ஏனென்றால் ஊழியர்கள் தங்களது சேவைக்கு மேலாக சிரமதான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் எங்களுடைய காரைதீவு பிரதேசத்தை சிறந்த,தூய்மையான பிரதேச மாற்ற வேண்டும் என்பதுக்காக ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று வினயமாக கேட்டுகொள்கிறேன்
No comments