Column Left

Vettri

Breaking News

25 ஆயிரத்துக்கும் மரக்கன்றுகளை நட்ட மின்மினி மின்ஹாவிற்கு விருது




பாறுக் ஷிஹான் சம்மாந்துறையை சேர்ந்த 14 வயது மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா அண்மையில் பொன்னாடை போர்த்தி விருது. வழங்கி கௌரவிக்கப்பட்டார். மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வருவதுடன் காலநிலை மாற்றங்கள் பிளாஸ்டிக் பொலித்தீன் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வருபவராவார்.
மேலும் மரங்களை நடும் செயற்திட்டம் கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் வேலைத்திட்டம் ஊனுக்கு உதவுவோம் எனும் செயற் திட்டம் மின்மினி சமூக சேவை அமைப்பு போன்றவைகளின் ஸ்தாபகராக இருந்து வழி நடாத்தி வருகிறார். இன்றைக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுய முயற்சியில் நட்டதோடு இலங்கை தீவில் விழிப்புணர்வு உரையினை இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிகழ்தியுள்ளார். இலங்கை தேசத்தில் பற்பல அமைப்புகளினால் 75க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு 'தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்' என்ற சர்வதேச விருதோடு உலகலாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மிக வயது குறைந்த சிறுமி ஆவார். இவரின் இளவயது சுற்று சூழலியல், சமூகப் பணியினைப் பாராட்டியே அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் லெட்டர் ஊடக அமைப்பின் 9வது ஆண்டு நிறைவு விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு அக்கறைப்பற்று மாநகர சபையின் முதல்வர் ஏ. எல்.எம். அதாவுல்லாஹ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் செயலாளருமான டால்டர். எம். கோபாலரெட்ணம் ,ஊடகவியலாளர்கள்,கல்வியலாளர்கள்,வர்த்தக பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்

No comments