30 லட்சரூபா செலவில் களுவாஞ்சிக்குடியில் பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் !!
( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி திட்டங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவுகளில் பின்தங்கிய பிரதேச மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக 58 மில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு கட்டமாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யபட்ட பயனாளிகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பு முகமாக மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்
No comments