எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்-தம்பிராசா செல்வராணி!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும் போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை ஊடக மையத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு நடைபெற உள்ள போராட்டம் குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்நிகழ் வினை வடக்கில் சங்கிலியன் சிலையிலிருந்து தொடங்கி செம்மணி வரை இப்பேரணி நிறைவடைந்து அவ்விடத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதே நாளில் கல்லடி பாலத்தில் இருந்து போராட்டம் ஆரம்பித்து காந்தி பூங்கா வரை ஊர்தி ஊர்வலத்துடன் சென்று கவனஈர்ப்பு போராட்டம் காந்தி பூங்காவில் முன்னால் இடம் பெறும் .
இந்தப் போராட்டமானது எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 17 வருட காலமாக உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நாங்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் 30 ஆந் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.இந்நிகழ்
அதே போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதே நாளில் கல்லடி பாலத்தில் இருந்து போராட்டம் ஆரம்பித்து காந்தி பூங்கா வரை ஊர்தி ஊர்வலத்துடன் சென்று கவனஈர்ப்பு போராட்டம் காந்தி பூங்காவில் முன்னால் இடம் பெறும் .
இந்தப் போராட்டமானது எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 17 வருட காலமாக உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று நாங்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறோம்.
16 வருட காலங்களாக இலங்கை ஆட்சியில் இருந்த பல ஜனாதிபதிகளுடன் எங்கள் உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கேட்டு உண்மையை கூறும் படியும் உங்களது உறவுகளை உயிருடன் கூட்டி சென்று பின்னர் காணாமல் ஆக்கப்பட்டது இவ்வாறு காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் இலங்கை இராணுவ படையினரிடம் கேட்டு கூறுங்கள் என எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை கேட்டிருக்கின்றோம்.
ஆனால் நாங்கள் இன்று 16 வருடத்தினை உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லாமல் தற்போது நாங்கள் சர்வதேச பொறிமுறையை நாடி இருக்கின்றோம்.சர்வதேச பொறிமுறைக்கு ஊடாக எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியையும் பெற்று தர வேண்டும் என்று நாங்கள் இப்போராட்டத்தில் கேட்க இருக்கிறோம்.எனவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் எங்கள் உறவுகளுக்கான நீதி அங்கு நிலைநாட்டப்பட வேண்டும்.

அதே நேரம் எமது அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து எங்களது உறவுகளுக்காக அங்கு சென்று குரல் கொடுத்து இலங்கையில் ஒரு இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை இந்த உலகத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் கேட்டு நிற்கின்றேன்.
அதுமட்டுமல்ல இப்போராட்டமானது நாங்கள் இன்று எமது உறவுகளை தொலைத்து விட்டு வீதியில் நின்று எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது உண்மையை கூறுங்கள். உயிருடன் கொடுத்தவர்கள் எங்கே என்று கத்திக் கொண்டு போராடுகின்றோம்.

இதை விட இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலத்தில் எதுவும் இவ்வாறு எதுவும் நடைபெற கூடாது என்ற ஒரு ஆதங்கத்திலும் உணர்விலும் இன்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
எனது கணவரை தொலைத்து எங்களது உறவுகளை தொலைத்து வீதியில் நின்று அழுது கொண்டிருக்கும் நாங்கள் . நாளை இங்கு உள்ள பிள்ளைகளை தொலைத்து நீங்கள் இவ்வாறு வீதியில் இருந்து ஆழக்கூடாது என்பதற்காக நாங்கள் இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடன் இதுவரை போராடிய 350 உறவுகளை நாங்கள் இன்று இழந்து இருக்கின்றோம் .அந்த ஒவ்வொரு உறவும் தனது பிள்ளை வருவான் என்றும் கணவர் வருவார் என்றும் எதிர் பார்த்தவர்கள் தான்.
இவ்வாறு இறந்தவர்கள் எவ்வளவு பல கதைகளை எமது போராட்டத்தில் கூறிக்கொண்டு இன்று இறந்து விட்டார்கள். மகனே எனது பாடையை தூக்கயாவது வருவீரா எனக்கு கடைசி தண்ணீர் ஊற்றயாவது வந்து விடுடா என்று இவ்வாறு கூறித்தான் அந்த தாய்மார்கள் இறந்திருக்கிறார்கள். இந்த நிலைமை இன்று உங்களுக்கு வேண்டாம் .

அந்த நிலையில் இருந்து நீங்கள் இன்று மீண்டு வர வேண்டுமென்றால் இலங்கையில் இனி ஒரு துயரம் நடக்காமல் இருக்க வேண்டும்.
எனவே தான் நீங்கள் அனைவரும் இம்மாத 30ஆந் திகதி நடைபெற இருக்கின்ற போராட்டத்தில் தோளோடு தோள் நின்று எங்களுக்கு ஆதரவு வழங்கி எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியும் வரை இந்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு நிற்கின்றோம்.
அது மாத்திரமல்ல எமது இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஊடகவியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மதகுருமார் ஆட்டோ சங்கத்தினர் மீனவர் சங்கத்தினர் முதியோர் சங்கத்தினர் அனைத்து பொதுமக்களும் பாதிக்கப்பட்ட தரப்புகளும் எங்களுடன் வந்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

அது மாத்திரமல்ல இன்று எமது ஊடகவியலாளர்கள் எமது முதுகெலும்பு ஆவர். இன்று எமது ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதை இந்த அரசாங்கம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்மையில் கூட முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் குமணன் அவர்கள் எத்தனையோ மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார்.
இவ்வாறான ஊடகவியலாளர்கள் எமது உறவுகளின் பிரச்சினைகள் மாத்திரமல்ல இலங்கையில் இடம் பெறுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வருகின்றவர்கள் ஆகவே இந்த ஊடகவியலாளர்களை ஏன் இவ்வாறு தாக்குகின்றீர்கள். அவர்களை தாக்க வேண்டாம் .அவர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

அவர்களுக்காகவும் நாங்கள் தோளோடு தோள் நிற்போம்.எனவே இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் அனைவரும் ஒன்று கூடி ஆதரவு தாருங்கள்.இதனூடாக எமது நியாயமான கோரிக்கை சர்வதேசத்தில் கொண்டு செல்வதற்கு சாதகமாக அமையும் என்றார்.
இதே வேளை எதிர்வரும் 30 ஆந் திகதி இம்மாதம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டொருக்கான சர்வதேச நீதியை பெற்றுக் கொடுக்கின்ற போராட்டம் நடைபெற உள்ளது.

எனவே கடந்த காலத்தில் பல தரப்பினராலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்து கூறி சர்வதேச பொறிமுறை ஊடாக அதற்கான தீர்வுகளை பெற்று கொள்ளும் நோக்கத்துடன் இப்போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம் .
No comments