Column Left

Vettri

Breaking News

"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" ஒன்றுகூடலில் பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் விளக்கம்!!




( வி.ரி. சகாதேவராஜா)

"சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை" என்ற தொனிப் பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (29) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன்  தலைமையில் நடைபெற்றது.

இதில் முக்கியமான பல விடயங்களை பணிப்பாளர் மருத்துவர் சுகுணன் மிகவும் இறுக்கமாகவும், பொதுமக்கள் சார்பாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் அங்கு விளக்கமளிக்கையில்..

சில சமூக வலைத்தளங்களில், இவ் வைத்தியசாலை பற்றியும், எமது சேவை பற்றியும் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. 
உண்மை, பொய், விளக்கம் என்பதற்கு அப்பால் நாம் சரியாக நடந்து கொள்கிறோமா, என அனைவரும் சிந்திக்க வேண்டும். தவறு எங்கு உள்ளது, என்பதை நாம் உணர்வதன் மூலம் அதற்கான தீர்வையும் காண முடியும். 
எந்தப் பிரச்சினை என்றாலும் முதலில் நாம் தவறுகளை எங்கு உள்ளது என உணர்ந்து கொள்வோமானால், அதன் பின் அதை திருத்துவதற்கான ஒரு பொறிமுறையை தெரிவு செய்ய முடியும். அவ்வாறு நாம் எமது பக்க தவறுகளை திருத்திக் சொல்வதனால் , 
தவறு காண்பவர்களே எம்மை பார்த்து தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. என்று கருத்துக்களை முன் வைக்கும் நிலைக்கு நாம் எம்மை மாற்றிக் கொள்ளலாம்.
அதுவே நமது திறமை.
ஒரு குறுகிய தூர பிரயாணத்தில் விபத்துக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட தூரப் பிரயாணத்தின் போது விபத்துக்கள் ஏற்படும் நிகழ் தகவு அதிகமாகவே காணப்படும். இங்கு நாம் நீண்ட தூரப் பிரயாணத்தில் பயணிக்கின்றோம். 
கண், மூக்கு தொண்டை காது, எலும்பு முறிவு, சத்திர சிகிச்சை, பொது வைத்திய நிபுணத்துவம், உளவியல் பிரிவு, இருதய நோய் பிரிவு, காச நோய் பிரிவு, பெண் நோயியல் பிரிவு, கதிரியக்க பிரிவு என்பவற்றுடன் இன்னும் பல விஷேட பிரிவுகளும் இயங்குகின்றன. 
வாரத்தில் ஏழு நாட்களும் தொடர்ச்சியாக நாம் பயணிக்கின்றோம். நீங்கள் அனைவரும் ஆற்றும் சேவையால்.
கொழும்பு, கண்டி என அலையாமல்  இங்கு வருபவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து, தற்போது கிளினிக் பிரிவு கூடிய நோயாளர்கள் வரும் பிரிவாக மாறி உள்ளது.
நாம் குறைந்த வளங்களை கொண்டிருந்தாலும் அதனைக் கொண்டு சிறந்த நிபுணர்களின் நிபுணத்துவத்துடன் இணைந்த வகைகளின் எமது அர்ப்பணிப்பான சேவைகளை முன்னிறுத்தி சேவை நாடிகள் திருப்பிக் கொள்ளும் நிலைக்கு எம்மை மாற்றிக் கொள்ளுவது அவசியம். 

எந்த ஒரு சேவை நாடிகளும் தங்களுக்கு தேவையான சேவைகளை 
எமது அனைத்து சேவை பிரிவுகளும் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டி உள்ளது. 
இங்கு பல குறைபாடுகள் சுட்டிக் காட்டப்படுகின்றது. 
ஆனால் நாம் அவ்வாறான குறைபாடுகள் இல்லாத வகையில் சிறந்த சேவையாற்ற, 
நாமும் எம்மை என்ன செய்ய முடியும் என்பதை நாளுக்கு நாள் நாம் சிந்தித்து மாற்றி அமைக்க வேண்டும். 
"கைசைன்" விதியும் அதையே கூறுகின்றது. 
எமது சேவை சமூகத்திற்கு செய்யும் அர்ப்பணிப்பான சேவையாக அமைய வேண்டும் என்றார். 

இது பற்றி கருத்து கூறிய கண் வைத்திய நிபுணர் மருத்துவர் சுடேஸ் சென்டவிதான கூறுகையில்..

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, கல்முனை, அக்கரைப்பற்று அம்பாறை பொத்துவில் என பல இட மக்களும் தொலை தூரத்தில் இருந்து வருகின்றனர். 
நாம் அனைவரையும் குறைந்த வளங்களைக் கொண்டு பார்வையிடுகின்றோம். 
எமது சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மூலம் அனைவரையும் திருப்தி செய்து வருகின்றோம். சிலவேளைகளில் வேலைப்பளு காரணமாக சில தவறுகள், குறைபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக நாம் தொழில்நுட்ப  சேவையுடனான மிக நுட்பமாக சேவை செய்ய வேண்டி உள்ளது.
இந்த எமது தரப்பு விடயத்தையும் சேவைநாடிகளுக்கு, ஊழியர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

சிறுபிள்ளை வைத்திய நிபுணர் மருத்துவர் எஸ்ஜே.றொசாந் கூறுகையில்.. இறைவன் எம் மீது அளவற்ற அன்பை வைத்துள்ளார். அதில் கொஞ்சமாவது நாம் ஏனைய உயிர்களிலும் பகிர்ந்து கொண்டு சிறந்த நட்பை தரும், அனைவரும் மகிழ்வுறும் வகையில் அன்பை பகிர்ந்து சேவை ஆற்றுவோம் என்றார். 

பொது வைத்திய நிபுணர் மருத்துவர் எஎஎம்.அன்வாஸ் கூறுகையில்.. அன்பாகவும் சேவையார்கள் விரும்பும் பாணியிலும் அவருடன் நட்பாக பழகுவது அவசியம். எமது சேவை தியாகம் அளப்பெரியது எமது அன்பான வார்த்தைகளால் தான் அதை வெளிக் கொண்டு வர முடியும் என்றார். 

உதவிப் பணிப்பாளர் வைத்திய அதிகாரி மருத்துவர் சா.இராஜேந்திரன் கூறுகையில்..
 தவறுகள் திருத்தப்பட வேண்டும். ஆனால் தேவையற்ற கருத்துக்களால் நாம் தளர்வு கொள்ளக் கூடாது. இன்னும் வேகமாக பயணிக்க வேண்டும்.
பணிப்பாளர் அவர்கள் 500 மில்லியனுக்கு மேலான நிதி ஒதுக்கீட்டை பெற்று தந்துள்ளார். உபகரண குறைபாடுகள் இனிமேல் இருக்க முடியாது. அதற்கு கைமாறாக நாம் எமது சேவைகளை வெளிக்காட்ட வேண்டும். 
யார் பிழை செய்தாலும் அது பணிப்பாளரையே தாக்கும். 
ஆகவே இதை உணர்ந்து நாம் அனைவரும் நடக்க வேண்டும் என்றார். 

கலந்து கொண்ட தாதிய பரிபாலகர் ரி.சசிதரன் , உள நல வைத்திய பிரிவு வைத்திய அதிகாரி மருத்துவர் அனிஸ் முகமட் ஆகியோரும் சிறந்த கருத்து பரிமாற்றத்திற்கான கருத்துக்களை முன்வைத்தனர். 

முடிவுரையாக கருத்து தெரிவித்த பணிப்பாளர் மருத்துவர் சுகுணன், 
நாம் அவரவர் தமது சேவையை திறம்பட செய்ய வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை நிச்சயம் என்னால் தர முடியும். ஆனால் தவறுகள் எங்கு நடந்தாலும் அதை மிகுந்த கருத்துடன் ஆராய்ந்து அதற்கான நிவர்த்தி நடவடிக்கை இனிமேல் தொடரும் என்றார். 


அனைத்து பிரிவுகளும் சிறந்த சேவை மூலம் சேவை நாடிகளின் திருப்திகரமான மனநிலையை பெற அர்ப்பணிப்பான சேவையுடன்  ஒன்றிணையுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

No comments