முல்லைத்தீவில் ஆணின் சடலம் மீட்பு!!
முல்லைத்தீவு நகரப் பகுதியில் சின்னாற்றில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) மீட்கப்பட்டது.
ஆற்றில் மிதந்த சடலம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் செல்வாபுரத்தை சேர்ந்த 54 வயது நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments