Column Left

Vettri

Breaking News

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் விழிப்புணர்வு செயலமர்வு




பாறுக் ஷிஹான் வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக அலுவல்கள் அதிகார சபையினால் “காகில்ஸ் சிலோன் பிரைவேட் லிமிடெட் கம்பனி” Cargills (Ceylon) Private Limited Company நிறுவன ஊழியர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையில் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.டீ.சீ. குணரத்தன தலைமையில் இன்று(30)சாய்ந்தமருது கார்கில்ஸ் ஃபுட் சிட்டி விற்பனை நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் கார்கில்ஸ் புட் சிட்டி (Cargills Food City) மற்றும் கே.எஃப்.சி (KFC, Kentucky Fried Chicken) விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி முஹம்மட் ஸாஜித் ஸமான் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான ஏ.பீ.எம் றிப்சாத்,எம்.எச்.எம் றிபாஜ்,ஆகியோர் கலந்து கொண்டதுடன் இதன் போது நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமான ஊழியர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

No comments