Column Left

Vettri

Breaking News

தேசிய விளையாட்டு வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறையில் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!




பிரதேச சபை சாம்பியனாக தெரிவு ( வி.ரி.சகாதேவராஜா) "ஒரு ஆற்றல் மிக்க குடிமகன் ஒரு வெற்றிகரமான நாடு" என்ற அரசாங்கத்தின் விளையாட்டு கொள்கையின் கீழ், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு விளையாட்டு வார நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 31ம் திகதி தேசிய விளையாட்டு தினத்துடன் இணைந்ததாக ஜுலை 26 முதல் ஜூலை 31 வரை நாடளாவியரீதியில் இத்திட்டத்தை செயல்படுத்தியிருந்தது. அதனை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநோகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று (30)விளையாட்டு உத்தியோகத்தர் எல்.சுலக்சனின் ஒருங்கிணைப்பில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில் சம்மாந்துறை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இச் சுற்றுப் போட்டிக்கு சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்,சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.டி.எம்.ஜனூபர்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் உட்பட பிரதி அதிபர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் சம்மாந்துறை பிரதேச சபை அணியினை எதிர்த்து சம்மாந்துறை வைத்தியசாலை அணியினர் மோதனர்.இதில் பிரதேச சபை அணியினர் வெற்றியடைந்தனர் என்பதோடு சிறப்பாட்டக்காரராக எம்.ஆசீக் தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments