Column Left

Vettri

Breaking News

உகந்தையில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதி காரைதீவு மக்களால் அன்பளிப்பு




 ( காரைதீவு குறூப் நிருபர் சகா)


வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் குண்டுச்சட்டி(கொமட்) கழிவறைத்தொகுதியொன்று வரலாற்றில் முதல் தடவையாக நிருமாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு உகந்தை முருகன் அடியார்கள் சங்கத்தினால் இம் மலசலகூடத்தொகுதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

உகந்தை மலை முருகன் தேவஸ்தானத்துக்கு வரும் அடியவர்களில் பலர் சாதாரண குழிக் கழிவறையில் கழிவகற்ற சிரமப்படுகிறார்கள்.
 அதனை உணர்ந்த காரைதீவு உகந்தை முருகன் அடியார்கள் சங்கம் இக் கொமட் வசதியுடன் கூடிய ஐந்து மலசலகூடங்களை நிருமாணித்துக் கொடுத்துள்ளது.

காரைதீவு மக்களின் அன்பளிப்பிலும் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பிலும் மலசலகூடத்தொகுதி புதிதாக ஆலயக வளாகத்தில் அமைக்கப்பட்டது.

இவ் மலசலகூடத்தொகுதியை ஆலய வண்ணக்கர் சுதுநிலமே சுதா மற்றும் லாகுகலை உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் ஆகியோரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
உகந்தமலை முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக திருவிழா நடைபெற்று வருகிறது.

No comments