Column Left

Vettri

Breaking News

விபுலானந்தாவின் பவளவிழா நடைபவனி ஏற்பாடுகள் துரிதம்!




( வி.ரி.சகாதேவராஜா)


காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியின் பவளவிழா நடைபவனிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதற்கான பழைய மாணவ அணிகளின் பிரதிநிதிகளுடனான தொடர் கலந்துரையாடல் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இம் மாபெரும் நடைபவனி
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.


பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அதிபர் ம.சுந்தரராஜன், பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா,
பழைய மாணவர் சங்க செயலாளர் எல்.சுலக்ஷன் ஆகியோர் அதற்கான நடைமுறை விதிமுறைகள் ஒழுங்குகள் தொடர்பாக  கருத்துக்களை பகிர்ந்தனர்.
 
விபுலானந்தாவில் கடந்த காலங்களில் கல்விகற்ற பழைய மாணவர்களின் 30 Batch அணிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் சகிதம் தனித்துவமான சீருடையுடன் கலந்து கொள்ள ஆர்வத்துடன் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பதை கூறினர்.


பவள விழா நடைபவனி செல்லவிருக்கன்ற மார்க்கம் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிதிகள் பிரமுகர்கள் பழைய மாணவர்கள் பங்குபற்றுகின்ற ஒழுங்கு முறை பற்றி விளக்கமளிக்கப் பட்டது.

ஏலவே உருவாக்கப்பட்ட அந்தந்த ஆண்டு அணிகளின் ஒன்றியங்கள் அவர்களது சீருடையில் சுதந்திரமாக பங்கேற்கலாம்.

அப்படி இதுவரை அணியாக ஒன்று சேராத பழைய மாணவர்கள் பொதுவான பவளவிழா சீருடையுடன் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்கள் அதிபர் அல்லது பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருடன் உடனடியாக தொடர்பு கொண்டு தங்கள் வரவை உறுதிப்படுத்துவதோடு பொதுவான பவளவிழா சீருடைக்கான பதிவையும் மேற்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

75 வருடகால வரலாற்றில் அங்கு கல்வி பயின்ற புலம்பெயர் விபுலானந்தியன்ஸ் மற்றும் நாட்டிலுள்ள விபுலானந்தியன்ஸ் இந்நடைபவனி வெற்றிபெற தமது பங்களிப்பையும் வரவையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மிகமுக்கியமான கலந்துரையாடலாக அமைந்தது.

பழைய மாணவர்கள் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை ஆலோசனைகளையும் வழங்கினர்




.

No comments