போஷாக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான பயிற்சி பட்டறை
நூருல் ஹுதா உமர்
போஷாக்கு உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான பயிற்சி பட்டறை கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ மல்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் றிப்கா அன்சார் அவர்களுடைய தலைமையில் பொறுப்பாசிரியர் எம்.எஸ். எப். அஸீமா அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் வளவாளராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு, இலை கஞ்சி தயாரித்து மாணவர்களுக்கு வழங்குதல், அறிவுறுத்தல் கையேடு வழங்குதல் போன்றன இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை உதவி அதிபர்களான ஏ.எம்.பரூஸ், ஏ.பி.ஏ. கபூர், உட்பட ஆசிரியை, ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
No comments