Column Left

Vettri

Breaking News

கோமாரி உச்சிமலை வீதி நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைப்பு




 பாறுக் ஷிஹான்


பொத்துவில் பிரதேச சபையின் PSDG-2025 வேலை திட்டத்தின் கீழ் கோமாரி உச்சிமலை வீதியின் நிர்மாண பணிகள் இன்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமான எஸ்.எம்.எம். முசாரப்பினால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 குறித்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை  உறுப்பினர் ரி.சுபோகரன் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ.முபாரக் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் குறித்த பகுதியின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.




No comments