Column Left

Vettri

Breaking News

வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் ஆராய்வு




 பாறுக் ஷிஹான்

 
தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 2ம் நாளான இன்று( 08) 'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்து தடுப்பு தினம்'
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய  நிந்தவூர் சுகாதார  வைத்திய அதிகாரி டாக்டர்  திருமதி ஜே.சிவசுப்ரமணியம்   தலைமையில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு  'வேலைத்தளங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை இனங்காண்போம் அவற்றை தடுப்போம்' எனும் கருப்பொருளின் கீழ் நிந்தவூர் சுகாதார  வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்,  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள் இனணந்து நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் வேலைத்தளங்கள்  மற்றும் தொழிற்சாலைகளில்  பரிசோதனையை மேற்கொண்டிருந்தனர் .

இதன்போது  அங்கு விபத்துக்கள் இடம்பெற சாத்தியமுள்ள  காரணிகளை இனங்கண்டு அதனை விபத்துக்கள் இடம்பெறா வண்ணம் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது பற்றிய அறிவுரையும் வழங்கப்பட்டது








No comments