Column Left

Vettri

Breaking News

இன்று காரைதீவு பத்திரகாளி அம்பாளின் தீமிதிப்பு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!




 ( வி.ரி.சகாதேவராஜா)


 வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் இன்று 16ஆம் திகதி புதன்கிழமை கடல் நீர் கொணர்ந்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.

 தொடர்ச்சியாக 09 தினங்கள் சடங்கு இடம்பெற்று ,10 ஆம் நாள் இம் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் நடைபெறவுள்ளது.

 காரைதீவு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தலைவர் கலாபூஷணம் எஸ். இராமநாதன் தலைமையில், பிரதம பூசகர் கி.சரவணபவா பங்கேற்புடன் உற்சவம் இடம்பெற இருக்கின்றது .

தினமும் பகல் பூசை 12.30 மணிக்கும் ,இரவு பூசை 7 மணிக்கும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது  என ஆலய பரிபாலன சபையின் செயலாளர் மா.கணேசலிங்கம் தெரிவித்தார்.

18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற இருக்கின்றது.

22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முத்துச்சரம் புறத்தில் அம்பாள் வீதியுலா வருகிறார்.

25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மஞ்சள் குளிக்கும் நிகழ்வு இடம் பெற்று தீமிதிப்பு வைபவம் இடம்பெறும் .

கூடவே ,அன்று அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.
 இறுதியாக 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை எட்டாம் நாள் வைரவர் திருச்சடங்கு இடம்பெறும் என்று செயலாளர் கணேசலிங்கம் மேலும் தெரிவித்தார்..

No comments