Column Left

Vettri

Breaking News

சம்மாந்துறை மாணவிக்கு இந்திய இளந்துளிர் சிகரம் விருது




 நூருல் ஹுதா உமர்


இந்தியா- தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்ட பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மோகன் பவுண்டேஷன் இணைந்து ஜூலை 15, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்துறைச் சாதனையாளர்களைப் போற்றும் வகையில் ஆளுமைகளுக்கான கர்மவீரர் காமராசரின் பூமாலைச்சிகரம் விருதுகள்-2025 வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கர்மவீரர் காமராசரின் பூமாலைச்சிகரம் விருதுகள்-2025 இல் இலங்கை சம்மாந்துறையை சேர்ந்த சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர் ஜே. பாத்திமா மின்ஹாவுக்கு "இளந்துளிர் சிகரம் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி மிளிரும் சொற்களால் காலமெல்லாம் ஓங்கும் புகழோடு வாழ வாழ்த்தி இந்த "இளந்துளிர் சிகரம் விருது" வழங்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சேர்ந்த சாதனை மாணவி மின்மினி மின்ஹா காலநிலை மாற்றமும் பிளாஸ்டிக் தவிர்ப்பு தொடர்பில் நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments