முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணை!!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரூ. 250,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மே 23ஆம் திகதி இவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments