நாளை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய ஆடிப்பூரம் !
( வி.ரி.சகாதேவராஜா)
நாளை 28 ஆம் தேதி திங்கட்கிழமை அம்மனுக்குரிய ஆடிப்பூரம்.
இந்துக்கள் வாழ்கின்ற பட்டிதொட்டியெங்கும் இவ்விழா கொண்டாடப்படவிருக்கிறது
நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை ( 28) திங்கட்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது .
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments