Column Left

Vettri

Breaking News

சர்வேதேச கண்டல் பாதுகாப்பு தினம் கண்டல் தாவரம் நடுகை நிகழ்வும் பாலக்குடா கிராமத்தில் இடம்பெற்று....




 ஜே கே.யதுர்ஷன்...


அரசின் வேலைதிட்டத்தின் கீழ் அழிந்து வரும் கண்டல் தாவரங்களை  பாதுகாக்கும் முகமா அம்பாறை வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று பிராந்திய வனப்பாதுகாப்பு காரியாலயத்தின் ஒழுங்கு படுத்தலில் சர்வதேச கண்டல் பாதுகாப்பு தினத்தினை ஒட்டி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா கிராமத்தில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது இன் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட வன துறை அதிகாரி R.M விஜயபால அவர்கள் கலந்து சிறப்பித்தார்....

 இவ் நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதுடன் கண்டல் தாவரத்தினால் ஏற்படும் நன்மை பற்றியும் குறித்த நிகழ்வில் நிகழ்த்ளப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கரங்களினாலும் தாவரங்கள் நடப்பட்டது ...

மேலும் இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மற்றும் அக்கரைப்பற்று வனப்பாதுகாப்பு காரியாலய உத்தியோத்தார்கள் திருக்கோவில் பிரதேச செயலக நிருவாக சேவைகளுக்கான நிர்வாக உத்தியோத்தர்,அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் கள உத்தியோகத்தர்  மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு  உத்தியோத்தர்கள் பொது அமைப்புகளின் பிரதி நிதிகள் பொது மக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்...


No comments