முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 08ஆவது ஆண்டு கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது!!
ஏ.எஸ்.எம்.அர்ஹம்
கரைபடியா அபிவிருத்திக்காக தன்னுயிர் அர்பணித்த முன்னாள் அமைச்சர், மறைந்த ஏ.ஆர். மன்சூர் அவர்களின் 08ஆவது ஆண்டு நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் (25) அவரது இல்லத்தில் முழு மரியாதையுடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அவரது இறைவழி வாழ்க்கையினை நினைவுகூரும் வகையில், புனித குர்ஆன் ஓதலும், உணர்வுபூர்வமான துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, அவரது அடகஸ்தலத்திலும் விசேட துஆ நிகழ்வு இடம்பெற்று, அவர் செய்த சேவைகளுக்காக கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பலர் நேரில் கலந்து கொண்டு மர்ஹூமின் சேவைகளை பகிர்ந்து நினைவுகூர்ந்தனர்.
உலமாக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், மர்ஹூமின் குடும்பத்தினர், அபிமானிகள், மற்றும் பொதுமக்கள் என சகல தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர்.
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள், தனது வாழ்நாளில் கல்வி, சமூக சேவை, அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் இளைஞர் முன்னேற்றத்திற்காக காட்டிய அர்ப்பணிப்பு இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்களால் நினைவுகூரப்படுகிறது. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்லாமல், மக்கள் நலன் கனிந்த மனிதர் என்பதும், அவரது சேவைகள் தலைமுறைகளை ஊக்குவிக்கும் என்றும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
No comments