Column Left

Vettri

Breaking News

கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம்!!




 பாறுக் ஷிஹான்

கல்முனை நீதிமன்ற வலயத்தில் இருந்து அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களாக 07 பேருக்கு நியமனம்

கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து சத்திய பிரமாண மொழி பெயர்ப்பாளர்களாக 07 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சால் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சாதனை சித்தி அடைந்த இவர்கள் கல்முனை மாவட்ட நீதிபதி ஏ. எம். முஹமட் ரியால் முன்னிலையில்  சம்பிரதாயபூர்வமாக சத்திய பிரமாணம் செய்தார்கள்.

இவர்களில் அநேகர் தமிழ் /ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (Sworn Translator)  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதிவிலக்கங்களை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.





No comments