Column Left

Vettri

Breaking News

இவ் வருடம் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியீடு !. வாழ்நாள் சாதனையாளராக விருது பேராசிரியர் அ.சண்முகதாஸ்!!




 ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழாவில் விருது பெறும் கலைஞர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது .

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்  சரவணமுத்து நவநீதன் நேற்று இரவு இதனை வெளியிட்டு வைத்தார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2025 ஆம்ஆண்டில்
நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் விருதுகள் வழங்குவதற்காக தெரிவு
செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் விபரம்.

அதன்படி தெரிவு செய்யப்பட்டுள்ள கலைஞர்களின் விபரம் வருமாறு..

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025
வித்தகர் விருது பெறும் கலைஞர்கள்

1. திரு. சஞ்சீவி சிவகுமார் -  இலக்கியம் -  அம்பாறை
2. திரு. வில்பிரட் மைக்கல் கொலின்  -  இலக்கியம் -  மட்டக்களப்பு
3. திரு. ஓ. கே. குணநாதன் -  இலக்கியம் -  மட்டக்களப்பு
4. ஜனாப். எம் ஐஎம்.  முகம்மது அஸ்ரப் -  இலக்கியம் -  அம்பாறை
5. ஜனாபா. சித்தி சபீனா பைத்துல்லா -  இலக்கியம் -  திருகோணமலை
6. திரு. செ. ஞானராசா -  இலக்கியம் -  திருகோணமலை
7. ஜனாப். தம்பிலெப்பை ஜவ்பர்கான் -  பல்துறை -  மட்டக்களப்பு
8. திரு. க. ரவீந்திரன் (ரவிப்பிரியா) -  பல்துறை -  மட்டக்களப்பு
9. திருமதி. சுசிகலாராணி ஜெயராம் -  ஆற்றுகை -  மட்டக்களப்பு
10. திரு. பொன்னம்பலம் குலசேகரம் -  ஆற்றுகை -  அம்பாறை
11. ஜனாப். முகைதீன் வாவா சம்சுதீன் -  ஆற்றுகை -  அம்பாறை
12. ஜனாப். உமர்லெப்பை யாக்கூப் -  ஊடகம் -  அம்பாறை
13. ஜனாப். ஏ. எம். ஜபறுல்லா கான் -  நாட்டாரியல் -  அம்பாறை
14. திரு. ஆறுமுகம் இராசரெத்தினம் -  நாட்டாரியல் -  மட்டக்களப்பு
15. திரு. டீ. எஸ். பி. சுசந்த அமரபந்து -  கலையிலக்கியம் - அம்பாறை
16. திரு. மொறபிடியகே குமாரசேன -  கலையிலக்கியம் - திருகோணமலை
17. திருமதி. எச். எம். தயாவதி -  கலையிலக்கியம் - அம்பாறை


இளங்கலைஞர் விருதுபெறும் கலைஞர்கள் - 2025

1. செல்வி. கத்லீன் ஷயனா ரவிக்குமார்   - பல்துறை  -   மட்டக்களப்பு
2. ஜனாப். சகாப்தீன் ஆஷாத் காமில்     - பல்துறை   -   திருகோணமலை
3. ஜனாப்.எம். ஐ. அச்சிமுகம்மது   - இலக்கியம்  -   அம்பாறை
4. ஜனாபா. கே.எல் பாத்திமா ந(க)ப்லா    - இலக்கியம்  அம்பாறை
5. ஜனாப். ஏ.எல். முகம்மது இர்ஷாத்    - இலக்கியம்  மட்டக்களப்பு
6. திருமதி. சிறிசெல்வம் ஜெயசிறி    - இலக்கியம்  திருகோணமலை
7. திருமதி.  சுஜந்தினிதேவி யுவராஜா    - இலக்கியம்  திருகோணமலை
8. திரு. சுகிர்தராஜா சபேசன்    - ஆற்றுகை  அம்பாறை
9. திரு. குமாரவடிவேல் குமாரதாசன்      - ஆற்றுகை  அம்பாறை
10. திரு. குலசிங்கம் கிலசன்    - ஊடகம்    அம்பாறை
.11. ஜனாப். ஏ.ஆர்.. முகம்மது  நௌபீல்    - ஊடகம் அம்பாறை
12. திரு. வடிவேல் திலீபன்    - நுண்கலை  -   மட்டக்களப்பு
13. திரு. பி. கிறேசன் பிரசாந்த்     - குறும்படம்  - மட்டக்களப்பு 
14. திரு. குழந்தைவேல் கோடீஸ்வரன்     - குறும்படம்  -  மட்டக்களப்பு
15. செல்வி. பி.ஏ. நதீகா பிரியதர்சினி    கலையிலக்கியம்-  அம்பாறை
16. திரு. பி. ஏ. நிஸ்ஸங்க -   கலையிலக்கியம்-  அம்பாறை
17. செல்வி. பி.எச் திலங்ஜலா நயனதாரா -   கலையிலக்கியம்-  அம்பாறை
18. திரு. ஆ. சுரஞ்சித் லக்சிறி செனவிரத்ன  கலையிலக்கியம்-  அம்பாறை
19. திரு. ஜே.ஆர்.எஸ். நயனஜித் ரணவீர    கலையிலக்கியம்-  திருகோணமலை
20. செல்வி. டி.எம். லக்மாலி சுதேஷணி   கலையிலக்கியம்-  அம்பாறை



சிறந்த நூல்களுக்கான கிழக்கு மாகாண சாகித்திய பரிசு – 2025
1 புலமைத்துவம் சார் ஆய்வு  செல்வி. டிலனி வல்தசார்  மட்டக்களப்பு இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி
2 அறிவியலும் தொழில் நுட்பமும் ஜனாப். எகிபா ராசித் அம்பாறை மகப்பேற்றில் கர்ப்பம் தரிப்பதற்கான போராட்டம்
3 சிறுகதை திரு. தவசிப்பிள்ளை விவேகானந்தம் மட்டக்களப்பு உமிச்சட்டி
4 கவிதை திரு. ரெட்ணம் சுவாகர் அம்பாறை இரகசியங்களால் ஆன ஒற்றைவரிக்கோடு
5 வரலாறு கலாநிதி. வன்னமணி குணபாலசிங்கம் மட்டக்களப்பு கிழக்கிலங்கையில் முருகவழிபாடு -வரலாறும் வழமைகளும்
7 சிறுவர் இலக்கியம் திருமதி. பிரிந்தா புஷ்பாகரன் மட்டக்களப்பு மழலைச் சத்தம்
8 நானாவிதம் திருமதி. சித்தி பாயிஸா முகம்மது அலி திருகோணமலை வகுப்பறைக்கு வெளியே பிரிவு -12
9 இலக்கிய சஞ்சிகை ஜனாப். அப்துல் அஸீஸ் முகம்மது பாயிஸ் அம்பாறை கீறல்
10 ஆன்மீகம் திரு. குமாரசாமி தவசீலன் மட்டக்களப்பு கர்மக்கோட்பாடு-சைவசித்தாந்த பௌத்த நோக்கு
11 ஆயுர் வேதம் டாக்டர். ம. நிரஞ்சன் திருகோணமலை மருத்துவத்தினூடாக ஆரோக்கியம்
வாழ்நாள் சாதனையாளர் 
விருது 

கிழக்குமாகாணத்தின் புகழை, தமது எழுத்துக்களினாலும், சேவையினாலும், மற்றும் தம்துறைசார் செயற்பாடுகளின் மூலமும் தேசிய மற்றும்  சர்வதேசரீதியில் பரவச்செய்த பணிக்காக அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் 
விருது வழங்கி கௌரவித்தல்:

மேற்படி வாழ்நாள் சாதனையாளர் விருதுக்காக 2024ம் ஆண்டில் பொருத்தமான முன்மொழிவுகளை பரிந்துரைக்குமாறு எமது மாகாணத்திலுள்ள அனைத்து கலாசார உத்தியோகத்தர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் நிபந்தனைகளுக்கும் அமைய திருகோணமலை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களின் பரிந்துரையாக மேற்படி விருதுக்கு பொருத்தமானவராக திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தகைசால்(சார்) (வாழ்நாட்) பேராசிரியர். அ.சண்முகதாஸ் அவர்கள் 2025ம் ஆண்டில் இடம்பெறவுள்ள இலக்கிய விழாவின் போது வாழ்நாள் சாதனையாளர் விருது – 2024 எனும் விருதினைப் பெறுவதற்காக தெரிவு செய்யப்படுகின்றார்.

No comments