Column Left

Vettri

Breaking News

மாளிகைக்காடு மு.கா. அமைப்பாளராக நாசர் நியமனம்




 ( வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மாளிகைக்காடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளராக எம்.எச். நாசர் நியமிக்கப்பட்டுள்ளார்


இவர் 2018ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நேரடி அரசியலுக்கு வந்தார்.

அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாளிகைக்காடு பிரதேசத்தின் முதலாவது அமைப்பாளராக மறைந்த கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீட் பணியாற்றினார்.
அவரைத் தொடர்ந்து 
25 வருடங்களாக தற்போதைய காரைதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் எம்எச்எம். இஸ்மாயில் அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளராட்சி மன்றத் தேர்தலில் 23 சொற்ப வாக்குகளால் நாசர் மாளிகைக்காடு கிழக்கில் தோல்வியுற்றார்.

மாளிகைக்காடு பிரதேசத்தில் பல அமைப்புக்களில் தலைவராக இருந்து சமூக சேவையில் ஈடுபட்டுவரும் நாசர் இன நல்லுறவுக்காக பாடுபட்டதற்காக காரைதீவு பிரதேச செயலகத்தால் "விபுல நேசன்" என்ற பட்டத்துடன் 2009 இல்  கெளரவிக்கப்பட்டார்.

No comments