ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட ;தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்திய பிரமாணம்
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை(21) மாலை நடைபெற்றது.
குறித்த சத்திய பிரமாணம் மற்றும் பைஅத் நிகழ்வுகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் கட்சியின் பிரதி அமைப்பாளர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன் போது முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments