Column Left

Vettri

Breaking News

கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு !




 


நூருல் ஹுதா உமர்

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தினால் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கல்முனை கால்நடை வைத்தியர்  திருமதி நிவேர்த்திகா அஹிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே. நௌசாட் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.





No comments

Subscribe Us