திருக்கோவில் பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில்
வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையில் இன்று (13) நடைபெற்றது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்ட சசிகுமார் தலைமையிலான அணியினர் 10 வட்டாரங்களில் 8 வட்டாரங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்ற அவரது பெயர் வர்த்தமானியில் தவிசாளராக பெயரிடப்பட்டதுடன் இன்று முதலாவது கன்னி அமர்வு நடைபெற்றது.
சபையின் செயலாளர்; சீ.திவாகரன் மற்றும் வண்டில் சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உபதவிசாளர் உள்ளிட்ட 8 உறுப்பினர்களும் தமிழரசுக்கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினரும் சபையில் பிரசன்னமாயிருந்தனர்.
தவிசாளர் கன்னி உரையினை நிகழ்த்தியதுடன் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று உரையாற்றினார்.
சபையின் செயலாளர் சபைக்காக தெரிவு செய்யப்படவேண்டிய சுகாதார அபிவிருத்தி நிதி நிர்வாக தொழிநுட்ப போன்ற பல்வேறு குழுக்களின் அங்கத்தவர்கள் தொடர்பில் தெளிவூட்டினார். இதன் பின்னராக சகல கட்சிகளையும் உள்ளடக்கியதான குழுக்கள் தெரிவு செய்யப்பட்டன.
தொடர்ந்து தவிசாளரினால் உறுப்பினர்கள் கருத்தை தெரிவிக்கும் வகையிலான ஒருவருக்கு இரு நிமிடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் அடுத்த கூட்டம் இடம்பெறுவதற்கு ஒரு வாரத்தின் முன்னர் தங்களது பிரேரணைகளை சபையின் செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தவிசாளர் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலத்தில் சபையின் செயற்பாடுகள் முறையாக நடைபெறவில்லை என்பதை அறிந்து கொண்டேன். அத்தோடு சபையில் உள்ள அதிகளவான சொத்துக்கள் பாவிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதையும் அவதானிக்க முடிந்தது. இவ்வாறு இருக்கையில் பொதுமக்களுக்கு எவ்வாறு சிறந்த சேவையினை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.
ஆகவே அனைத்து உறுப்பினர்களும் இணைந்து பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதேநேரம் தம்பிலுவில் மத்திய சந்தையின் முன்பாக ஆர்ப்பாட்டங்களை செய்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் வேறு இடங்களில் அதனை செய்யுமாறு தான் விடுத்த தடை உத்தரவை சிலர் தவறான முறையில் சித்தரிக்க முற்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டங்களையோ அல்லது எதிர்ப்பினையோ செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத இடங்களில் நடத்தலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.
நிறைவாக செயலாளரின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இதன் பின்னராக தவிசாளர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார்.

No comments