Column Left

Vettri

Breaking News

அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்ட ருபேசன் அடிகளார் கல்முனையில் திருப்பலிப்பூஜை!!




(வி.ரி. சகாதேவராஜா)

 கல்முனை மண்ணின் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை கிட்ணன் ருபேசன் அடிகளாரின் முதலாவது திருப்பலி பூஜை நேற்று முன்தினம் கல்முனையில் நடைபெற்றது.

இறையியல் பயிற்சியை பூர்த்தி செய்த ருபேசன் கடந்த 22.5.2025 அன்று மன்னார் புனித செபஸ்டியார் பேராலயத்தில் குருவாக திருநிலை படுத்தப்பட்டார். அவருடன் மேலும் எழுவர் அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.

 பின்னர் அவர் தனது முதலாவது நன்றி திருப்பலியினை அருட்தந்தையின் சொந்த பங்கான  கல்முனை திரு இருதய நாதர் ஆலயத்தில்  சிறப்பாக நிறைவேற்றினார்.

இதனை  கல்முனை பங்குத்தந்தை பேதுரு ஜீவராஜ் அடிகளாரின் தலைமையில் பங்கு சமூகமும், அனைத்து பக்தி சபைகளும் ,பங்கு மேய்ப்பு பணி சபையினரும் பங்கு பற்றி சிறப்பாக சிறப்பித்தனர்.





No comments

Subscribe Us