குருக்கள்மடம் முதியோர் இல்லத்தில் யோகாசனப் பயிற்சி
செ.துஜியந்தன்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அப்றோ விபுலானந்தர் முதியோர் நலன்புரி அமைப்பினால் நடத்தப்படும் குருக்கள் மடத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்களுக்கு யோகாசனப் பயிற்சி வழங்கப்பட்டது.
இங்கு முதியோர்களுக்கான இலகுவான மூச்சு பயிற்சி, தியானம் , உடல் உள வலியைப்போக்கக்கூடியதான யோகானசப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. முதியோர்கள் ஆர்வமுடன் இவ் யோகப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இவ் யோகாசனப் பயிற்சிகளை இந்தியாவின் பெங்களூர் விவேகானந்த யோக ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவரும், இந்திய கலாசார நிலையத்தில் பத்து வருடங்கள் யோகப் பயிற்சி கொடுத்தவருமான யோகாசனக்கலாநிதி கலாபூஷணம் கா.சந்திரலிங்கம் வழங்கினார்.
No comments