Column Left

Vettri

Breaking News

சிறைச்சாலை அச்சகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்!!





சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் அச்சிடும் பிரிவில் பணிபுரிய அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ‘சேப்பல்’ பிரிவின் பிரதான பிரிவிலேயே இவ்விருவரும் வைக்கப்பட்டுள்ளனர்.

 அரசுக்கு 53 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற விசாரணை நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.அதே நேரத்தில் அரசுக்கு 53 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மஹிந்தானவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த வாரம் இவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் மூலம் கரம் போர்டுகளையும் செஸ் போர்டுகளையும் இறக்குமதி செய்து கழகங்களுக்கு விநியோகித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

No comments

Subscribe Us