Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது.




 வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது.

சபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த ஆ.தர்மதாச தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக சுயேட்சைக்குழு உறுப்பினர் க.ரகுபதி தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் தலைமையில் பிரதேச சபை இன்று (30) ஒன்று கூடியபோதே பெரும்பான்மையினை நிருபித்து தமிழரசுக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
16 ஆசனங்களை கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபையில் தமிழரசுக்கட்சி 7 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 7 ஆசனங்களையும் சுயேட்சைக்ககுழு 2 ஆசனங்களையும் கைப்பற்றியது.
இந்நிலையில் தமிழரசுக்கட்சியும் சுயேட்சைக்குழுவும் இணைந்து ஆட்சியை அமைத்துக்கொண்;டது.
இதன் அடிப்படையில் இன்று சபை கூடியபோது தவிசாளரை தெரிவு செய்யும் பொருட்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது. தவிசாளர் தெரிவில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஆ.தர்மதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஆர்.ரதீசன் ஆகியேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஆர்.தர்மதாச 9 வாக்கினை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதுடன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஆர்.ரதீசன் 7 வாக்கினை பெற்றுக்கொண்டார்.
உப தவிசாளர் தெரிவின்போது சுயேட்சைக்குழவை சேர்ந்த க.ரகுபதி முன்மொழியப்பட்டு போட்டியின்றி தெரிவானார்.
சபையில் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டபோதும் சபை தெரிவு இடம்பெறும் மண்டபத்தின் இடவசதியின்மையினை காரணம் காட்டி உள்;நுழைய மறுக்கப்பட்டிருந்தனர்.
இதேநேரம் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இறுதியாக பாராளுமன்ற உறுப்பினர் தவிசாளர் உபதவிசாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.


No comments