Home
/
இலங்கை செய்தி
/
கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!
கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு பிரதான வீதியில் உள்ள ஒரு சதுப்பு நில அபகரிப்பானது நேற்று (22.05.2025) குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள சதுப்புநில வயல் காணிகள் அனுமதியற்ற வகையில் மூடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 01.04.2025 ஆம் திகதி கிராம உத்தியோகத்தரால் சதுப்பு நில காணி மண்ணிட்டு நிரப்பியமை தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டதோடு குறித்த மண் அகற்றப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் (22.05.2025) மேலும் ஒரு சதுப்பு நில அபகரிப்பானது குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பிரதான வீதி காரைதீவு 01 இல் அமைந்துள்ள சதுப்புநில காணியானது இனந்தெரியாத நபர்களினால் கடந்த 09.05.2025 ஆம் திகதி அனுமதியற்ற வகையில் மண்ணிடப்பட்டபோது,அது தொடர்பான பொலிஸ் முறைப்பாடு கிராம உத்தியோகத்தரினால் பிரதேச செயலாளர் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த காணியினுள் இடப்பட்ட கிறவல் மண்ணானது காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெகத், ரத்நாயக்க(SI) மற்றும் குறித்த பிரிவு கிராம உத்தியோகத்தர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மண்ணானதுஇன்று அகற்றப்பட்டது. இச் செயற்பாட்டிற்கான வாகன உதவியை காரைதீவு பிரதேச சபை வழங்கியிருந்தது.
கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!
Reviewed by Thanoshan
on
5/23/2025 12:29:00 PM
Rating: 5
Reviewed by Thanoshan
on
5/23/2025 12:29:00 PM
Rating: 5


No comments