Column Left

Vettri

Breaking News

சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள்!!




 வி.சுகிர்தகுமார்       

 உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் இணைந்து ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளில் சுவாமி விபுலானந்தரை நினைவு கூரும் நிகழ்வுகள் இன்று (23) இடம்பெற்றன

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளையின் தலைமையில் உப தலைவர் க.கிருஸ்ணமூர்த்தியின் ஒருங்கிணைப்பில் பாடசாலைகளின் அதிபர்களின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற நிகழ்வுகளில் மன்றத்தின் பொருளாளர் வி.சுகிர்தகுமார் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தை நிறுவிய சுவாமி விபுலானந்தரின் நூற்றாண்டு விழா அப்பாடசாலையில் இன்று ஆரம்பமானது.
பாடசாலை அதிபர் திருமதி நித்தியானந்தனின் வழிநடத்திலில் இடம்பெற்ற நிகழ்வுகளில் சுவாமி விபுலானந்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து விபுலானந்தரின் வெள்ளை நிற மல்லிகையோ பாடல் மாணவிகளால் பாடப்பட்டதுடன் மாணவர்களின் உரையும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் த.கயிலாயபிள்ளையின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.
இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் ஆலையடிவேம்பு திருநாவுக்கரவு வித்தியாலயம் கோளாவில் பெருநாவலர் வித்தியாலங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.



No comments

Subscribe Us