விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது!!
விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரி சங்குகளுடன் நான்கு சந்தேக நபர்கள் ஜா-எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 14.05.2025 அன்று மாலை, ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்றுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஜா-எல நகரில் சோதனை நடத்தி, ரூ1 மில்லியன் ரூபாவுக்கு . விற்கத் தயாராக இருந்த 02 வலம்புரி சங்குகளுடன் 04 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய, பதுகிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 23 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
No comments