Column Left

Vettri

Breaking News

அம்பாறை அரச அதிபர் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்







 (வி.ரி. சகாதேவராஜா)

.
 இன்று நடைபெறவிருக்கும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் கசூன் ஸ்ரீநாத் அதனாயக்கவினால் விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு, வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்தல், அவசர காலங்களில் அந்தந்த தொகுதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்து, அங்கு அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் நிர்வாக கிராம அதிகாரிகள் ஆகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டன.

மேலும் தேர்தல் சட்டங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மேலதிக மாவட்ட செயலாளர் சிவ. ஜெகராஜன் கலந்து கொண்டார்.

No comments