வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் -பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!!
நாட்டில் தற்போது நிலவும் வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும்.
அதன்படி, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை செயற்படுத்த பொலிஸ் அதிகாரிகள் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கொத்மலை பஸ் விபத்து குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பஸ் சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments