Vettri

Breaking News

திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் !




 ( வி.ரி.சகாதேவராஜா)


திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா நேற்று (2) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகியது .

1925 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த புனித சூசையப்பர் ஆலயத்தின்  நூற்றாண்டு விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விழா எதிர்வரும் 11 ஆம் தேதி திருப்பலி பூஜையுடன் நிறைவுபெறவிருக்கிறது.

ஆலய
பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அடிகளாரின் தலைமையில் முதல் நாள் கொடியேற்றத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

விழாவில் அருட்தந்தை அம்புறோஸ் மறையுரை ஆற்றினார் .

ஆலய முதல் நாள் நிகழ்வில் அவ்வட்டாரத்துக்கான தலைவி திருமதி யுவராஜினி  ஆதி நாயகம் நன்றி உரையாற்றினார். திருமதி வேர்ஜினி பிரசாட் மன்றாட்டு வழங்கினார்.

நூறாறுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் அங்கு கலந்து கொண்டு கொடியேற்ற திருவிழாவிலும் ஏனைய நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்கள்.










No comments