Vettri

Breaking News

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு -உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் பாராட்டு









 பாறுக் ஷிஹான்


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  அரச ஊழியர்களுக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாகவும் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதாக  இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழிற் சங்கம் மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊடக வியலாளர் மாநாடு   கல்முனை மயோன் பிளாஸா மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். ஹூஸைன் முபாறக், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் சார் பான 15 அம்சக் கோரிக்கைகளை முன்மொழிந்து உரையாற்றுகையி லேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த பட்டதாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அவற்றை மையப் படுத்தி அவர்கள் வேண்டி நிற்கும் தீர்வுகள் குறித்தும் அவர் எடுத்து ரைத்தார்.இந்த நிகழ்வின் ஓர் அம்சமாக சிரேஸ்ட  ஊடகவியலாளர்களான எம்.ஐ. சம்சுதீன் மற்றும் எம். சஹாப்தீன் ஆகியோரின்  ஊடக சேவைக்காக   பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் இத்தொழிற் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments