Column Left

Vettri

Breaking News

திக்கோடை கணேச மகா வித்தியால ஆசிரியர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!!




செ.துஜியந்தன்  

இன்று மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்கு திக்கோடை கணேச மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள்  நவீன கற்பித்தல் சாதனங்களை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான  பயிற்சியில் கலந்து கொண்டனர்.

திக்கோடை கணேச வித்தியாலயம் அதிபர் ஆ.நித்தியானந்தம் தலைமையில்   சம்மாந்துறை உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட ஆசிரியர்கள் அங்கு AI தொழில்நுட்பம் மற்றும் நவீன கற்பித்தல் முறைகள் தொடர்பான பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

இங்கு சம்மாந்துறை உயர் தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.எல்.முஸ்தபா, பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன், கலாநிதி மதி, விரிவுரையாளர்  நெளபீக் ஆகியோர் ஆசிரியர்களுக்குரிய நவீன கற்பித்தல் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது

No comments