கடந்த 05 மாதங்களில் 1,842 வீதி விபத்துக்கள்; 965 பேர் உயிரிழப்பு!!
இந்த வருடத்தில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 1,842 வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த மே மாதம் ஆரம்பம் தொடக்கம் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி வரை 902 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் வாகனங்களை செலுத்துதல், மது போதையில் வாகனங்களை செலுத்துதல், வீதி ஒழுங்கு சட்டங்களை மீறி வாகனங்களை செலுத்துதல் போன்ற காரணங்களாலேயே இந்தளவு வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும் அந்த தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அது தொடர்பாப சாரதிகளை தெளிவூட்டும் செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த தலைமையகம் தெரிவித்துள்ளது.
No comments