சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாழடைந்த ஆழமான நீர் குழியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்பு
சம்மாந்துறையில் மூன்று வயது சிறுவன் பாழடைந்த ஆழமான நீர் குழியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்பு
சம்மாந்துறையில் இன்று (22) பிற்பகல் உடங்கா -02 பௌஸ் மாவத்தை வீதியில் மூன்று வயது ஆண் பிள்ளை பாழடைந்த ஆழமான நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 3 மணித்தியாலமாக பிள்ளையை தேடிய பொதுமக்களும் பெற்றோரும் அந்த மரணமடைந்த பிள்ளையின் வீட்டுக்கு அருகில் உள்ள மிக ஆழமான பாழடைந்த நீர்க்குழிக்குள் இருந்து மரணமடைந்த நிலையில் பிள்ளையின் உடலை மீட்டுள்ளனர்
இனம் தெரியாத ஒரு ஆண் இளைஞரினால் இந்தப் பிள்ளை அழைத்துச் செல்லும் காட்சி அருகில் உள்ள CCTV காணொளி பதிவில் பிள்ளை கண்டெடுப்பதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு பதிவாகியுள்ளது. அழைத்து செல்லும் காட்சி மட்டுமே CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் உள்ளது. ஆனால் குழிக்குள் எப்படி அந்த குழந்தை மரணமடைந்தது என்பது தெரியவில்லை.
பொதுமக்கள் போலீசார் உடன் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போதே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது. மரணம் அடைந்த பிள்ளையின் ஜனாஸா தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.ஜெயலத் தலைமையில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments