Vettri

Breaking News

மாளிகைக்காடு சுற்றுச்சூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு




 பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம்  மாளிகைக்காடு கிழக்கு கடற்கரை பகுதி சுற்றுசூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான  பரிசோதனை செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.

இதன் போது  காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ. அருணன் ,காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லீமா வசீர், பொது சுகாதார பரிசோதகர்  உத்தியோகாதர்கள், பகுதி கிராம சேவகர், காரைதீவு பிரதேசசபை செயலாளர்,  கடற்சூழல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகாதர்கள், மீன்வாடி சங்க உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய திணைகள உத்தியோகதர்கள் கலந்து கொண்டனர்.


இதன்போது இப்பகுதி வியாபார நிலையங்களின் திண்ம, திரவ கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்ப திட்ட ஆலோசனை சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் முன் மொழியபட்டது.  மேலும் இப்பகுதியில் அனைத்து அரச நிறுவங்களின் பங்களிப்போடும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.








No comments