வரிப்பத்தான்சேனை அஸ்ரப் பொது மைதான நுழைவாயிலை நவீன முறையில் நிர்மாணித்த முன்னாள் எம்.பி ஹரீஸ்!
நூருல் ஹுதா உமர்
பிராந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்த முன்னாள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக திகாமடுல்ல மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக வரிப்பத்தான்சேனை மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த அஷ்ரப் ஞபகார்த்த பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்காக கடந்த காலங்களில் நிறைய நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார். அதனையொட்டியதாக அப்பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த அஷ்ரப் ஞபகார்த்த பொது விளையாட்டு மைதான நுழைவாயில் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் டீ- 100 திட்டத்தின் கீழும், பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளினால் செய்யப்பட்ட 54 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்துள்ள பிரம்மாண்ட நுழைவாயிலை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டார்.
நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நுழைவாயிலை மக்களுக்கு கையளித்தல், இந்த மைதான மேலதிக அபிவிருத்திகள், இன்னும் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் சம்மந்தமாகவும், ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடி இருந்தார்.
மேலும் இவ் விஜயத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஜே.எம். அன்வர் நௌஸாத், மக்கள் தொடர்பாடல், ஊடக விவகார செயலாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விளையாட்டு வீரர்களும், பாடசாலை மாணவர்களும் நிறைவான பலனை அடைவதுடன் எதிர்காலத்தில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை பெற இது வசதியாக இருக்கும் என்றும் இந்த நிர்மாண பணியானது அப்பிரதேச மக்களுக்கு மட்டுமல்ல ஏனைய பிரதேச வீரர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments