Column Left

Vettri

Breaking News

கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் மாளிகைக்காடு பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு…!!!




ஏ.எஸ்.எம்.அர்ஹம்

சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக அதிகரித்திருக்கின்ற நீர்க்கட்டணங்களினால் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளாகி இருக்ககூடிய மாளிகைக்காடு பிரதேசத்தில் மிகவும் தேவையுடைய சில பயனாளர்களை இனங்கண்டு இவ் அசெளகரியங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களுக்கான குழாய்க்கிணறுகள் YWMA பேரவையின் அனுசரணையில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இக்குழாய்நீர்க்கிணறுகள் அமைக்கப்பட்டு பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் இஸ்மாயில் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments