Home
/
இலங்கை செய்தி
/
காங்கேயனோடை தெற்கு கிராம விவகாரம்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் எடுத்துரைப்பு..!
காங்கேயனோடை தெற்கு கிராம விவகாரம்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் எடுத்துரைப்பு..!
(எஸ். சினீஸ் கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள
பூர்வீக கிராமமான காங்கேயனோடை 155B தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் பல தசாப்தங்களாக வசித்து வந்த சுமார் 27 குடும்பங்களை எவ்வித அறிவித்தலுமின்றி அருகிலுள்ள புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைக்கின்ற நடவடிக்கையை நிறுத்த கோரி கடந்த வாரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் கையொப்பத்தோடு கடந்த வாரம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் (1) மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் நேரடியாக சென்று சந்தித்து நிலைமைகளை தெளிவு படுத்தியதோடு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடைய கடிதத் தலைப்பில் அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட கடிதத்தினையும் வழங்கி பாராளுமன்ற உருப்பினரின் செயலாளர் விடயங்களை முன்வைத்தார்.
இவ்விடயம் தொடர்பில் விரைவாக ஆராய்ந்து பதில் அளிப்பதாக அரசாங்க அதிபர் இதன்போது உறுதியளித்தார்.
காங்கேயனோடை தெற்கு கிராம விவகாரம்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி அரசாங்க அதிபருக்கு எழுத்துமூலம் எடுத்துரைப்பு..!
Reviewed by Thanoshan
on
3/01/2025 05:50:00 PM
Rating: 5
Reviewed by Thanoshan
on
3/01/2025 05:50:00 PM
Rating: 5

No comments