Column Left

Vettri

Breaking News

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி!!




 நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

 கிழக்கு, தென்,ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா ,பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

No comments

Subscribe Us