Column Left

Vettri

Breaking News

மகாசிவராத்திரிக்கான ஆறுநாள் யாழ்- திருக்கேதீச்சரம் பாதயாத்திரை இன்று திருக்கேதீச்சரத்தில்!




(வி.ரி.சகாதேவராஜா)

உலக சைவத்திருச்சபையின் ஏற்பாட்டில் ஒன்பதாவது வருடமாக மகாசிவராத்திரியை முன்னிட்டு, யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து நல்லூர் சென்று ஆரம்பமாகிய திருக்கேதீஸ்வரத்திற்கான ஆறுநாள் பாதயாத்திரை இன்று (26) புதன்கிழமை திருக்கேதீச்சரத்தை சென்றடைகிறது.

உலக சைவதிருச்சபையின் இலங்கைக்கான இணைப்பாளர் ஸ்ரீ சுமுகலிங்கம் தலைமையில் நடைபெறும் இப் பாதயாத்திரை நேற்று (25) செவ்வாய்க்கிழமை காலை பாப்பாமோட்டையை சென்றடைந்தது.

 கதிர்காம பாதயாத்திரீகர் குழுத்தலைவர்  வேல்சாமி ஜெயராஜா தலைமையிலான
குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

 கடந்த 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதற்கான விசேட பூஜையும் வழிபாடும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெற்றது.
சந்நிதியிலிருந்து  வெள்ளிக்கிழமை பூஜை  முடிந்தகையோடு மாலை நல்லூருக்கான பாதயாத்திரை ஆரம்பமாகி 10 மணியளவில் சென்றடைந்தது.

சுமார் 30 பக்தர்கள் ஆறுநாட்களின்பின்னர் இன்று சிவராத்திரியன்று திருக்கேதீஸ்வரத்தை அடைந்து மகாசிவராத்திரி விரதம் அனுஸ்ட்டிப்பார்கள்.



No comments