Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்!!




 பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரவியராஜ்   ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர்  ஏ.ஆதம்பாவாவின்  தலைமையில் திங்கட்கிழமை(10)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  மஞ்சுள ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன்   தேசிய மக்கள் சக்தியின் கரையோர பிரதேச இணைப்பாளர் ரவி,பிரதேச செயலக உதவிச் செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர் ,திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள், எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

இங்கு கடந்த காலங்களில்  இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றனவா? என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது.

மேலும் இப்பிரதேச செயலக பிரிவிலுள்ள குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு,யானை வேலி அமைப்பது பற்று கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. 




No comments