Column Left

Vettri

Breaking News

பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் தண்டப் பணம் விதிப்பு




பாறுக் ஷிஹான்

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய திங்கட்கிழமை  (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய குறித்த சிற்றுண்டிசாலை உரிமையாளருக்கு எதிராக  சுகாதார வைத்திய அதிகாரிகளினால் வழக்கு தாக்கல் மேறடகொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியவேளை  ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன்  எச்சரிக்கையையும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us