சாய்ந்தமருது பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் : பிரதேச அபிவிருத்தி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது!!
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (15) புதன்கிழமை பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் அவர்களின் ஏற்பாட்டில் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் சுகாதாரம், கல்வி,காணி விளையாட்டு நீர்ப்பாசனம், தோணா அபிவிருத்தி, கடலரிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மீனவர்கள் எதிர் நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
No comments